அமெரக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான பதற்றம் நாளுக்கு நாள் பனிப் போர் போன்று நீடித்து வருகின்றது.

 

ஆனால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றிக்கு பின்னர், இதற்கு சுமூக தீர்வு காணப்படலாம் என்று நம்பப்பட்டது.

 

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான வர்த்தக போருக்கு மத்தியில் பல அமெரிக்க நிறுவனங்களும், சர்வதேச நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் சீனாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தன.

 

அந்த காலகட்டத்தில் சீனாவில் இருந்து வெளியேறினால், அதற்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்றும் சில நாடுகள் அறிவித்தன.

 

இதற்கிடையில் பல்வேறு வர்த்தக நெருக்கடிகள் நிலவி வந்த காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் இடம்பெற்றது.

 

சீனா எதிர்பார்த்ததை போலவே பைடனும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இப்போதாவது சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா நிறுவனங்கள், வெளியேற்றத்தை நிறுத்துவார்களா?

 

குறிப்பாக அப்பள் நிறுவனத்தின் விநியோகத்தர்கள் அங்கு நிலைகொண்டிருப்பார்களா என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைடன் அரசின் கீழும் அப்பிளின் விநியோகத்தர்கள் வெளியேறுவது நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.

 

அப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய மற்றும் பாரிய விநியோக சந்தையாக சீனா திகழ்கின்றது. ஏனெனில் ஐபாட், டேப்லெட்டுகள், ஹோம் பாட் ஸ்மார்ட்ஸ்பீக்கர், ஏர்போர்ட்கள் உள்ளடக்கிய பலவற்றை அப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து தான் தயாரிக்கின்றது.

 

அப்பிளின் ஒவ்வொரு பொருட்கள் உற்பத்தியிலும் சீனாவினையே சார்ந்திருந்தது. இதற்கிடையில் ட்ரம்பின் அறிவிப்புக்கு பின்னர் அப்பிளின் விநியோகத்தர்கள் தங்களது உற்பத்தியினை, சீனாவில் இருந்து அகற்றி வருகின்றனர்.

 

அப்பிளின் மிகபெரிய விநியோகத்தரான ஃபாக்ஸ்கான், ஹான் ஹாய் போன்ற முன்னணி நிறுவனங்கள் வியட்நாம் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 270 மில்லியன் டொலர் புதிய முதலீடுகளை ஒதுக்கியுள்ளது.

 

மேலும் வியட்னாம், இந்தியா போன்ற நாடுகள், சீனாவிலிருந்து வெளியேரும் நிறுவனங்களை கவர பல சலுகைகளை வாரி வழங்குகின்றன. எனவே இந்த போக்கு மாற்ற முடியாததாக தோன்றுகிறது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.