ஒரே படத்தில் உச்சம் தொட்ட அபர்ணா முரளி “சூரரைப் போற்று” பட நடிகையின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரே படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால் கேரளத்து நடிகையான அபர்ணா முரளிக்கும் கோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது.

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியான இந்த திரைப்படத்தை முதல் நாளிலேயே 55 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

இந்த படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.அதேபோல் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கும், மனைவியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

ஒரே படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால் கேரளத்து நடிகையான அபர்ணா முரளிக்கும் கோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது. அதன் விளைவு தற்போது தமிழில் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் சில லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அபர்ணா பாலமுரளி, தற்போது தனது சம்பளத்தை கோடியை தாண்டி ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது.