Cambridge இல் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Brennan Place இல் இரவு 10 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

இந்நிலையில் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு தன்னார்வ தீயணைப்பு வீரரும் இணைந்து எரியும் வீட்டிற்குள் சென்று குறித்த பெண்ணை கண்டுபிடித்து மீட்டதாக கூறப்படுகிறது.

குறித்த தீ விபத்து தொடர்பில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்