நாயே பேயே படத்தில் முக்கிய கேரக்டரில் யோகி பாபுவை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்தனர். ஆனால் ஏற்கனவே பல படங்களில் பிஸியாக உள்ள யோகி பாபு, இந்தப் படத்தின் ஒரு விளம்பர பாடலுக்கு மட்டும் நடித்து கொடுத்துள்ளார். இதற்காக அவர் சம்பளமே வாங்காமல் படக்குழுவை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார். பிஸியாக உள்ள போதும் நட்புக்காக யோகி பாபு செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம் என படக்குழுவினர் உருகியுள்ளனர்.