இந்தியாவில் கோவிட் தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி தொழிநுட்பம் மூலமாக இன்று (30) ஆய்வு செய்யவுள்ளார்.

 

குறித்த பணிகளில் “ஜென்னோவா பயோபார்மா ‘பயாலஜிக்கல் மற்றும் ‘டொக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி’ ஆகிய நிறுவனங்களின் மருத்துவ வல்லுனர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

 

இவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி தொழிநுட்பம் மூலமாக ஆலோசனை நடத்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

கோவிட் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அஹமதாபாதில் உள்ள ‘ஜைடஸ் கேடிலா’ ஹைதராபாத்தின் ‘பாரத் பயோடெக்’ மற்றும் புனேவில் உள்ள ‘சீரம் இந்தியா’ நிறுவனங்ளுக்கு நேற்று முன்தினம் நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.