இந்தியா, நெல்லையில் உள்ள ஒரு செல்போன் கடையின் திறப்பு விழாவிற்கு கெஸ்ட்டாக சென்ற குக் வித் கோமாளி புகழால் கூட்டம் அலைமோத அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவுக்கு இன்று விஜய் தொலைக்காட்சியின் குக்கு வித் கோமாளி புகழ் சென்றிருந்தார்.

அவரைக் காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கூடினர். கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் அங்கு கூடிய ரசிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மாஸ்க் அணியாமலும் கூடியிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் புகழை காண செல்போன் கடைக்கு வந்திருந்த ரசிகர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருந்ததால் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடையை வந்து பார்வையிட்டு விதிகளை மீறியதாக கூறி கடைக்கு சீல் வைத்தனர்.