Hawke's Bay நகரமான Havelock North பகுதியில் இன்று பிற்பகல் ஒருவர் பலத்த காயங்களுடன் காணப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதியம் 3.50 மணியளவில் Panckhurst St இல் குறித்த நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் Hawke's Bay மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவர் எப்படி காயமடைந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்