!தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக நடித்து வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். தற்போது படங்களில் நடித்து அரசியலில் ஈடுபட்டும் வருகிறார்.
சமீபத்தில் லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான். அப்படத்தின் போது திரிஷா பற்றி அவதூறாக பேசி சர்ச்சையிலும் சிக்கிய நிலையில் மீண்டும் ஒரு புதிய சிக்கலில் சிக்கியிருக்கிறார் மன்சூர் அலிகான்.
சில நாட்களுக்கு முன் கஞ்சா, மெத் ஆகிய போதைப் பொருட்களை விற்றதாக கூறி சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடரில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்-ஐ விசாரித்துள்ளனர் போலிசார்.
விசாரணையில் போதை பொருள் விற்ற கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்தது உறுதியானதால் அலிகான் துக்ளக்கை கைது செய்துள்ளனர்.