ஒடாகோவில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து கோழி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோழி பண்ணையில் கடந்த திங்கட்கிழமை ui7N6 துணை வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக நியூசிலாந்து அரசாங்கம், அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இது உலகளவில், மனிதர்களில் பரவுவதற்கான அச்சத்தை எழுப்பிய ui7N6 விவகாரத்திலிருந்து வேறுபட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட பண்ணையில் 80000 கோழிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்