ஆக்லாந்தில் உள்ள பல பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளுக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். சுமார் 10 பள்ளிகளுக்கு இவ்வாறு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல் மூலம் ஆபத்து இருப்பதாக நம்பவில்லை என்றும், ஆனால் இந்த சம்பவம் தொடர்பில் குறித்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் Green Bay உயர்நிலைப் பள்ளியும் அடங்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி நிருபர் - புகழ்