இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டை தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு திடீரென இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரம் இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனா். மேலும் 200க்கும் மேற்பட்டோரை பணயகைதிகளாக பிடித்து சென்றனா். அவர்களில் பலரை ஹமாஸ் அமைப்பு படுகொலை செய்துவிட்டது.
மேலும் சிலர் விடுவிக்கப்பட்டனா். எனினும் 100க்கும் மேற்பட்டோர் தற்போதும் ஹமாசிடம் பணய கைதிகளாக உள்ளனா். அவர்களை மீட்க இஸ்ரேல் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையில்,"ஹமாஸ் அமைப்பினர் பணயகைதிகளாக இஸ்ரேல் மக்களை பிடித்து வைத்துள்ளனர்.
மேலும் இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வருகின்றனா். ஹமாஸ் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணயகைதிகளை ஜனவரி 20 ஆம் திகதிக்குள் விடுவிக்க வேண்டும். ஜனவரி 20 ஆம் திகதி எனது ஆட்சி அமைவதற்குள் பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஹமாஸ் பேரழிவை சந்திக்க வேண்டி இருக்கும்.
மத்திய கிழக்கு பகுதியில் பேரழிவு ஏற்படுத்தப்படும். அமெரிக்க வரலாற்றில் இல்லாத கொடூர தண்டனை ஹமாஸூக்கு வழங்கப்படும்" என டொனால்ட் டிரம்ப் வார்னிங் கொடுத்துள்ளார். டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையால், ஹமாஸ் அமைப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.