இஸ்ரேல் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், அந்நாட்டு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
பள்ளிவாயல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் இதாமர் பென் க்விர் தனது எக்ஸ் பக்கத்தில் ,
பள்ளிவாயல்களில் இருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விஷயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
அதேவேளை இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.