Hastings இல் இன்று பிற்பகல் ஏற்பட்ட ஒரு பாரிய தீ பரவல் அங்கு அமைந்துள்ள பல வீடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மாலை 4.15 மணியளவில் Haumoana என்ற இடத்தில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவலானது அங்குள்ள வீடுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தற்போது 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்