தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தளபதி விஜய், தனுஷ், சூர்யா, மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடச்த்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு மலையாளம் என கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அட்லீ தயாரிப்பில், இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள, பேபி ஜான் படத்தில் கதாநாயகியாக நடித்து, இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் பாடல் கூட சமீபத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த வாரம் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்தது. கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்யப்போகிறார் என கூறப்பட்டது. ஆனால், கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், தற்போது தனது காதலர் ஆண்டனி தான் என உறுதி செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 15 ஆண்டுகள் நாங்கள் இருவரும் காதலித்து வருகிறறோம் என கூறி, தனது வருங்களாக கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.