இன்று பிற்பகல் Nelson அருகே நடந்த விபத்தில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாலை 4 மணியளவில் Sunrise Valley சாலை மற்றும் Supplejack Valley சாலைக்கு இடையில் உள்ள Moutere நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று பாதசாரி மீது மோதியதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
படுகாயமடைந்த பாதசாரி ஆபத்தான நிலையில் நெல்சன் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சிறிது நேரம் சாலை மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி நிருபர் - புகழ்