இன்று காலை ஹமில்டன் கிழக்கில் ஒரு குழுவின் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காலை 11.30 மணியளவில் Firth தெருவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரு குழு சண்டையிட்டுக்கொண்டதாக பொலிஸாருக்கு புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் வைகாடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியதாவது: “இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் பலரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்