தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஆரம்பமாகி உள்ளது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.