பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது அவர் நடித்துள்ள ‘சிட்டாடல் ஹனி பனி’(Citadel: Honey Bunny) என்ற வெப் சீரிஸில் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரம் காஷ்வி மஜ்முந்தருக்கு தாயாக சமந்தா நடித்திருப்பார்.
இந்நிலையில் இந்த படம் தொடர்பான பேட்டி ஒன்றில், காஷ்வி மஜ்முந்தருக்கு தாயாக இருந்ததை மிஸ் பண்ணுகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, "குழந்தை நடிகருடன் பணிபுரிவது ஒரு நம்பமுடியாத அனுபவம். இது மிகவும் திறமையானது. நான் என் மகளுடன் பழகுவது போல் உணர்ந்தேன்.
எனக்கு தாயாக வேண்டும் என ஆசை. அது மிகவும் அழகான அனுபவம். அதற்காக நான் காத்திருக்கிறேன். மக்கள் என் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள், ஆனால் அதற்கு இன்னும் தாமதம் ஆகவில்லை. தாயாக முடியாத காலம் என்பது நமது வாழ்வில் இல்லை என்று நினைக்கிறேன்" என கூறினார்.