இன்று காலை Whanganui ஆற்றில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சடலம் கடந்த வாரம் வியாழன் முதல் காணாமல் போன ஒருவருடையது என கருதப்படுகிறது.
சிட்டி பிரிட்ஜ் அருகே உள்ள தண்ணீரில் சடலம் ஒன்று இருந்ததாக பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
சடலத்தை முறையாக அடையாளம் காணும் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், Whanganui ஆற்றில் காணாமல் போன நபரின் உடல் என்று கருதப்படுகிறது.
செய்தி நிருபர் - புகழ்