சூர்யாவின் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் நவம்பர் 14ம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகிறது படக்குழு. இதன் மூலமாக pan இந்தியா ஹிட் ஆக கங்குவா படத்தை மாற்றும் முயற்சியில் இருக்கின்றனர்.
அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் ஏற்கனவே திவாலானவராக அறிவிக்கப்பட்டு இருப்பவர். அவரது சொத்துக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரிடம் கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்கும் பணிகளையும் நீதிமன்ற சொத்தாட்சியார் செய்து வருகிறார்.
அவரிடம் இருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கடன் வாங்கி இருக்கிறது.
அந்த கடன் 20 கோடி ரூபாயை வரும் 13ம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கின்றனர். அதை செலுத்தாமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
அதனால் கடைசி நேரத்தில் கங்குவா படத்திற்கு சிக்கல் வந்திருக்கிறது.