நடிகர் நெப்போலியன் -ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷ்-அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த பெண் இந்தியா - திருநெல்வெலியை சேர்ந்தவர், தனுஷ்- அக்ஷயாவின் திருமணம் நிச்சயமான போது இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் வைரலாக இருந்தது.
இதனை முறியடிக்கும் விதமாக பிரமாண்டமாக நெப்போலியன் ஜப்பானில் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, நெப்போலியன் மகன் தனுஷ்- அக்ஷயா திருமணம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷ் இல்லற வாழ்க்கையில் எப்படி ஈடுபடுவார் என்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பிரபல சமூக ஆர்வலர் கிருஷ்ணவேல் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
அதாவது, “ தனுஷ்- அக்ஷயா திருமணம் ஒரு பொம்மை திருமணம். இந்த திருமணத்தினால் யாருக்கு என்ன பலன் என தெரியவில்லை. அந்த பெண்ணால் தனுஷிடம் மனம் விட்டு கூட பேச முடியாது. மகனுக்கு இவ்வளவு செலவு செய்து நெப்போலியன் திருமணம் செய்து வைத்து என்ன சாதித்தார். தனுஷிற்கு தற்போது தேவை மனைவி அல்ல, நன்றாக பார்த்து கொள்வதற்கு நர்ஸ்,
இந்த திருமணத்திற்காக அக்ஷயாவிற்கு பல கோடி சொத்து எழுதிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சொத்தை வைத்துக்கொண்டு அந்த பெண்ணால் என்ன செய்ய முடியும், இப்படியொரு திருமணம் செய்ததற்கு பதிலாக தமிழ் நாட்டில் தனுஷ் பெயரில் அறக்கட்டளையொன்று ஆரம்பித்து இருக்கலாம். தலைமுறை தலைமுறையாக இவரின் பெயர் பேசப்பட்டிருக்கும் ” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.