நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சுனிதா வெளியேற்றப்பட்டார். இவருடைய இந்த எலிமினேஷன் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தை கொடுத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சுனிதா. வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தனக்கென்று ஒரு தனி இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் சின்னத்திரையில் முக்கிய நட்சத்திரமாக மாறிய சுனிதா பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுத்தார். ஐந்து வாரங்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்த சுனிதா கடந்த வாரம் எலிமினேட் ஆனார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் 35 நாட்கள் இருந்த சுனிதா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் என்கிற கணக்கில், 35 நாட்களுக்கு ரூ. 7 முதல் ரூ. 8 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.