பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏனைய நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின் பரிசீலிக்கப்படும் என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் என்ற வகையில் ரஷ்யா, இலங்கையின் விண்ணப்பத்தை வரவேற்பதாகவும், அது நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற சமீபத்திய உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கான கோரிக்கையை  இலங்கை பதிவு செய்தது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.