வட அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம்  ஹூஸ்டனி்ல் அமைந்துள்ள மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சூரசம்ஹாரம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

47 ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு அடையாளமாகவும் தமிழர்களுக்கும் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்து வட அமெரிக்காவில் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை, திருவிழாக்களை மிக விமர்சையாக மதுரையில் உள்ள  ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் போலே இங்கும் அதே முறையில் கடந்த 47 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

  

சூரசம்காரம் மிக விமர்சையாக இந்த கோவிலில்  முருகன் சன்னதியில் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் வார நாட்களில் மக்கள் கோவிலுக்கு வருவதென்பது சற்று கடினமான ஒன்று.   புதன்கிழமையான இன்று மாலை ஐந்து மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி விமர்சையாக சிறப்பாக நடைபெற்றது. 

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக முருகனுக்கு அபிஷேகம், சூரசம்ஹாரம் வதம் செய்தல், வள்ளி தெய்வானை கல்யாணம் மற்றும் ஊர்வலம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டது. சுமார் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் முக்கியமாக காலை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் கூட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முருகரைப் பற்றி அருமையாக பக்தி பாடல்கள் பாடியது அனைவரையும்  பரவசமூட்டியது. கந்தனுக்கு அரோகரா எனும் கோஷம் விண்ணை முட்டியது.

 

இதுபோல் பல்வேறு திருவிழாக்கள் மூலம் நம் கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

இப்படிக்கு,
பெருமாள் அண்ணாமலை 
பக்தர்,
ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில்


தகவல்
எமது நிருபர் - ஷீலா ரமணன்