நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திருமணத்தில் நெப்போலியன் கண்கலங்கிய காட்சி வெளியாகியுள்ளது.
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் நேற்று மிகவும் கோலாகலமாக ஜப்பானில் நடைபெற்றது.
தற்போது 25 வயதாகும் தனுஷிற்கு சதை தசைவு நோய் உள்ளதால் அவரால் நடக்க முடியாமல் இருக்கின்றார். ஆனால் அவரது தந்தையின் ஐடி நிறுவனத்தை அவர் தான் கவனித்து வருகின்றார்.
நடிகர் நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்து வீடியோ கால் மூலமாக நிச்சயதார்த்தம் செய்தனர்.
பின்பு ஜப்பானில் திருமணம் என்பதால் தனது மகனை கப்பலில் அழைத்து சென்றார். ஏனெனில் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தார்.
இந்நிலையில் தனுஷின் திருமண காட்சி வெளியாகியுள்ளது. மணப்பெண்ணின் கழுத்தில் தனுஷ் தாலி கட்டிய பின்பு நெப்போலியன் அழுகை கட்டுப்படுத்த முடியாமல் காணப்பட்டார்.
பின்பு ஒரு கட்டத்தில் கண்ணீர் சிந்தியுள்ளார். தற்போது தனுஷின் திருமண காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.