இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை ஏதும் இல்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரான்ஸ், இத்தாலி போன்ற பிரபலமான இடங்களைப் போலவே, இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசனையும் 2ஆவது நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024, ஒக்டோபர் 23ஆம் திகதி அன்று, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அறுகம்குடாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நம்பகமான தகவல் காரணமாக, அதன் பணியாளர்களுக்கான பயணத்தைத் தடை செய்தது.

அறுகம்குடா பகுதியில் ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் இருப்பதை  அறிந்ததும், இந்த அறியப்பட்ட விபரங்களை, தாம் இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக சங் தெரிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில், இலங்கையின் அரச அதிகாரிகள் விரைவாக பதிலளித்தனர். இந்தநிலையில், இலங்கையுடனான கூட்டாண்மையை தமது நாடு மதிப்பதாக ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, இலங்கையின் தலைமை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். 

கடந்த வார பாதுகாப்பு எச்சரிக்கை அடிப்படையில், அமெரிக்கர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை அறுகம் விரிகுடாவைத் தவிர்க்க வேண்டும்.
இருப்பினும், இலங்கைக்கான அவர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆலோசனைகள் பல ஆண்டுகளாக நிலை 2இல் உள்ளன. 
மாலைத்தீவு, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைப் போலவே இலங்கையும் இன்னும் 2ஆம் நிலை ஆலோசனையிலேயே உள்ளது என்றும் அமெரிக்கா தூதுவர் ஜூலை சங் தெரிவித்துள்ளார்.