தென் கொரியாவினால் வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்பை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கை தொடர்பில் புதிய அரசாங்கம் அக்கறை காட்டாத நிலையில், குறித்த 10,000 தொழில் வாய்ப்பை வேறு நாட்டுக்கு வழங்குவது தொடர்பில் தென்கொரிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் இலங்கை பெற்ற ஒதுக்கீட்டை கம்போடியா பெற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.