பிக் பாஸ் ஷோவின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங். குறிப்பாக அந்த ஷோ தொடங்கிவிட்டால் சின்னத்திரை ரசிகர்களுக்கு என்டர்டைன்மெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது.

அடுத்த மாதம் பிக் பாஸ் 8 தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இறங்கி இருக்கிறது.

இந்நிலையில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

முந்தைய சீசன்களில் பரபரப்பை ஏற்படுத்திய சில போட்டியாளர்களை மீண்டும் கொண்டு வர குழு திட்டமிட்டு வருகிறதாம். அப்படி சர்ச்சை பிரபலங்கள் யாராவது மீண்டும் வந்தால் பிக் பாஸ் 8ல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.