தெற்கு ஆக்லாந்தில் உள்ள ஒரு முஸ்லீம் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் வீடியோ மற்றும் மின்னஞ்சல் நியூசிலாந்தில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இரவு அல் மதீனா பள்ளியின் அதிபருக்கு துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடும் வீடியோவை அனுப்பியதை அடுத்து திங்கள்கிழமை காலை சயீத் கல்லூரி மற்றும் அல் மதீனா பள்ளி ஆகியவை மூடப்பட்டன.
இந்நிலையில் இரண்டு பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அல் மதீனா பள்ளியின் உதவி தலைமையாசிரியர், குறித்த மின்னஞ்சல் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் இரு பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நேரத்தில் சமூகத்திற்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் - புகழ்