ஆக்லாந்தின் Grey Lynn பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 வயதான Maxwel-Dee Repia என்ற இளைஞன் கொல்லப்பட்டார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் தெற்கு ஆக்லாந்தில் 19 வயது இளைஞனைக் கைது செய்ததாகவும், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் திங்கள்கிழமை ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 18 வயதான இளைஞர் ஒருவர் மேற்கு ஆக்லாந்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் க்ளென் பால்ட்வின் கூறுகையில், எங்கள் விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் தொடர்ந்து பணியாற்றுவார்கள், வீடு வீடாகச் சென்று சாட்சிகளையும் சிசிடிவி காட்சிகளையும் தேடுவார்கள்.

தயவுசெய்து, உங்களிடம் தகவல் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் என‌ அவர் வலியுறுத்தினார்.

செய்தி நிருபர் - புகழ்