North Island மற்றும் South Island இன் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே Marlborough, Wellington, Wairarapa மற்றும் Tararua ஆகிய பகுதிகளில் இரவு 11 மணிக்குள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் கடுமையான புயல் வீசக்கூடும் என MetService தெரிவித்துள்ளது.
மக்கள் பலத்த காற்றினால் சேதமடையக்கூடிய பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என MetService வலியுறுத்துகின்றது.
மேலும் சனிக்கிழமையன்று North Island இந்த வடக்கு மற்றும் மேற்கில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை South Island இன் தெற்கு மற்றும் மேற்கில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி நிருபர் - புகழ்