ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் மின்சார பியானோக்கள் மற்றும் கீபோர்ட்களை திருடியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான குறித்த நபர் நேற்று இரவு 10.30 மணியளவில் பியானோக்கள் மற்றும் கீபோர்ட்களை திருடிக்கொண்டு ஒரு வாகனத்தில் அங்கிருந்து வெளியேறியதாக மூத்த சார்ஜென்ட் டேவ் பிளங்கெட் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் Eden Terrace இல் உள்ள ஒரு விடுதிக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

பின்னர் காவல்துறை ஊழியர்கள் அதிரடியாக விடுதிக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து பெரிய தொகை பணம் மற்றும் மூன்று கீபோர்ட்களை பொலிஸார் மீட்டனர், ஒவ்வொன்றும் சுமார் $350 மதிப்புடையது."

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.