ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதிகளான Māngere Bridge மற்றும் Onehunga வில் திடீர் இணைய செயலிழப்பு காரணமாக சுமார் 3000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோரஸ் இணைய சேவை தெரிவித்துள்ளது.

நேற்று காலை 5.30 மணிக்கு இந்த இணைய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அது தொடர்வதாக கூறப்படுகிறது.

புறநகர் பகுதிகளுக்கு பிராட்பேண்ட் வழங்கும் கேபிள்கள் சேதமடைந்துள்ளதாகவும், புதன்கிழமைக்குள் சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என்றும் கோரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் தங்கள் குழுவினர் சிக்கலைத் தீர்க்க 24 மணி நேரமும் உழைத்து வருவதாக கோரஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

செய்தி நிருபர் -‌ புகழ்