ஆக்லாந்தின் Manurewa பகுதியில் நேற்றிரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவு 11 மணிக்கு பின்னர் Manurewa, Antalya Pl என்ற முகவரியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதனிடையே சம்பவம் நடந்த குறித்த முகவரியில் இருந்த 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் இன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
செய்தி நிருபர் - புகழ்