மத்திய வெலிங்டனில் உள்ள ஐந்து கடைகளின் ஜன்னல்களை சேதப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் வழங்கிய ஒரு அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பில் 48 வயதான ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவர் நாளையதினம் வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

Dairy Shop, துணிக்கடை உட்பட ஐந்து வணிக நிலையங்களின்‌ கண்ணாடி ஜன்னல்களை குறித்த நபர் சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்