டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அந்தகன். பாலிவுட் திரையுலகில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.
கதாநாயகனாக பிரஷாந்த் கம் பேக் கொடுத்துள்ளார். அதே போல் பிரஷாந்துக்கு இணையான நடிப்பில் மிரட்டியிருந்தார் நடிகை சிம்ரன்.
மேலும் இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், அந்தகன் திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்தகன் கடந்த 5 நாட்களில் உலகளவில் ரூ. 4.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது என தெரிவிக்கின்றனர்.