இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக எலான் மஸ்க் இன் ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12 முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் "தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்" அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.