அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கெய்ர்ன்ஸ் என்ற இடத்தில் ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகாப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பிளேக் வில்சன் என்ற 23 வயதான நியூசிலாந்து விமானி உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானபோது விமானி மட்டுமே அங்கு இருந்துள்ளார்.

மேலும் உரிய அனுமதியின்றி விமானம் புறப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.