பாகிஸ்தானில் கராச்சியில் 40 வயது மதிக்கத்தக்க சைக்கோ மனிதன் ஒருவன் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இறந்த அந்த பெண்ணின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அது போல் அவர் மீது சுடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது, பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பாகிஸ்தானின் கோரங்கி என்ற கல்லறையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு பெண்ணின் சடலத்தை முகமது சலீம் என்ற 40 வயது நபர் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த சடலத்துடன் அவர் உடலுறவு கொண்டார்.

இதை அப்பகுதியாக சென்றவர்களும் அந்த பெண்ணின் உறவினர்களும் கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து போலீஸாரையும் அவர்கள் வரவழைத்தனர்.

போலீஸார் சலீமிடம் விசாரணை நடத்தியதில் அவர் இது போல் புதிதாக புதைக்கும் பெண் சடலங்களை கண்காணித்துக் கொண்டே இருப்பாராம். பிறகு யாரும் இல்லாத நேரத்தில் இரவில் வந்து அந்த சடலங்களை தோண்டி எடுத்து உறவு கொள்வாராம். இதுவரை 4 பெண் சடலங்களுடன் அவர் உறவு கொண்டுள்ளாராம்.

இந்த சலீம் கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு கோரங்கி என்ற சுடுகாட்டில் சடலங்களை தோண்டி எடுத்து இப்படி ஒரு அக்கிரமத்தை செய்ததாக அப்பகுதி மக்களால் பிடிபட்டாராம். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தோண்டப்பட்ட சடலத்தை நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் புதைக்க உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நபரை மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய போலீஸார் அழைத்துச் சென்றனர். ஜூன் 22 ஆம் தேதி லாகூரில் இருந்து ஒரு சம்பவம் நடந்தது. அங்கு 3 மாத குழந்தையின் சடலம் கல்லறையில் காணாமல் போனது. இந்த சம்பவம் மியான சாஹிப் கல்லறையில் நடந்தது. இது குறித்து குழந்தையின் சடலம் காணவில்லை என தந்தை போலீஸில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பாகிஸ்தானில் இது போல் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்குகள் ஏராளமாக பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் உயிரோடு இருக்கும் போதுதான் இந்த மிருகங்கள் வேட்டையாடுகிறது என்றால் இறந்த பிறகும் இது போல் சைக்கோக்களிடம் பெண் சடலங்கள் சிக்குகின்றன.