விடாமுயற்சி படம் இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இவர்களுடைய போஸ்டர்களும் வெளிவந்தது. அசர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்பின், மீண்டும் ஒரே ஒரு பாடல் காட்சிக்காக அசர்பைஜான் செல்லவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. அதனை எதிர்பார்த்து ரசிகர்களுக்கும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தின் இதுவரை எடுக்கப்பட்ட ரஷ் காட்சிகளை சமீபத்தில் அஜித் பார்த்துள்ளாராம்.

படம் ஹாலிவுட் தரத்தில் வந்திருக்கிறது என்று இயக்குனர் மகிழ் திருமேனியை பாராட்டியுள்ளாராம். மேலும் என்னை மிகவும் இம்ப்ரெஸ் செய்துவிட்டது என்றும் அஜித் கூறினாராம். இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.