இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி இன்று மேலும் 3 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
வேட்புமனுக் கோரல் எதிர்வரும் 15ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் விஷேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.