Palmerston North பகுதியில் திருடப்பட்ட வாகனம் ஒன்றை பின்தொடர்ந்த பொலிஸார் பல துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் 18, 20 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நண்பகலில், அவாபுனி பகுதியில், திருடப்பட்டதாக நம்பப்படும் இலக்கத் தகடுகள் இல்லாத ஒரு காரை பொலிஸார் கண்டதாக மணவாடு பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் ரோஸ் கிரந்தம் தெரிவித்தார்.

வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டிய போதிலும் வாகனத்தில் இருந்தவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் குறித்த வாகனத்தை பொலிஸார் பின்தொடர்ந்து சென்ற போது வாகனத்தில் இருந்த‌ ஒருவர் பின்தொடர்ந்து வந்த பொலீஸ் காரை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை நடத்தினார்.

இருப்பினும் பாதுகாப்பான தூரத்தில் பொலிஸார் வாகனத்தை தொடர்ந்து பின்தொடர்ந்தனர். மேலும் Highbury இல் உள்ள ஒரு தெருவை சுற்றி வளைத்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் பிரிவு அப்பகுதிக்கு வந்து மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும் குற்றவாளிகள் இருந்த ஒரு முகவரியை சோதனை செய்ததில் 22 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் கைப்பற்றியதாக இன்ஸ்பெக்டர் ரோஸ் கிரந்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் Palmerston North நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்