பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “ எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா விதிமுறைகளின் படி, நான் என்னை எனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தயவுசெய்து என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.