உக்ரைன் இராணுவத்தில் பாரிய ஆளனி வெற்றிடங்கள் நிலவிவரும் நிலையில் பேட் ஒன் (Bad One) எனப்படும் ரோபோ நாயை போர்ப்படையில் பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது.
குறித்த ரோபோ நாய்களை, ரஷ்ய போர் திட்டங்களை உளவு பார்ப்பது அல்லது கண்ணிவெடிகளை கண்டறிவது போன்ற ஆபத்தான பணிகளுக்கு வீரர்களுக்கு பதிலாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இவை போர் படைகளின் முதல் வரிசையில் நிறுத்தப்படவுள்ளன.
அண்மையில், உக்ரைனின் ஒரு அடையாளம் காணப்படாத பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த ரோபோ நாய் அதன் செயற்பாட்டாளர் வழங்கிய கட்டளைகளுக்கமைய இயங்கியுள்ளது.
மிகவும் வேகமான மற்றும் தந்திரோபாய திறன்களை கொண்ட இந்த ரோபோ நாய்கள் விரைவில் உக்ரைன் போர் படையில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.