அமெரிக்காவில் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை விட முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான முக்கிய இரு வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம் தமது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 05 மற்றும் 09ஆம் திகதிகளுக்கிடையில் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி மேற்கொண்ட அண்மைய கருத்து கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் டிரம்பை நான்கு சதவீத புள்ளிகளில் முன்னிலை வகிக்கின்றமை தெரியவந்துள்ளது.
விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 1,973 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 50% முதல் 46% வரை ஆதரவுடன் கமலா ஹாரிஸ் ட்ரம்பை நான்கு சதவீத புள்ளிகளில் முன்னிலை வகிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் பென்சில்வேனியாவில் 10 புள்ளிகள் அதிகரித்து கணிசமானளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.
ஜனநாயகக் கட்சியினரும் கமலா ஹாரிஸை மிகவும் புத்திசாலியாகவும், ஆளுமைக்கு தகுதியானவராகவும் கருதுகின்றனர். அத்துடன் தேர்தலுக்கு இன்னும் 03 மாதங்கள் உள்ள நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.