இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 26,889 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 12 இலட்சத்து 24,948 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
இவர்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதற்கமைய, இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன், சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.