மத்திய ஆக்லாந்தில் மெத்தாம்பேட்டமைனை விநியோகம் செய்த மூன்று மெக்சிகன் நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23, 27 மற்றும் 32 வயதுடைய மூன்று ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே சுமார் 63 மில்லியன் டொலர் பெறுமதியான 180 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் டாம் கோலன் கூறுகையில், மூன்று மாத கால தீவிர நடவடிக்கையின் விளைவாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மெக்சிகோ கார்டெல் நிறுவனத்துடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்