இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் அறிவு பாடி ஆடியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த மார்ச் 7ம் தேதி யூடியூப் தளத்தில் வெளியான இந்த பாடல் வெறும் 28 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.