பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தகவலில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி கொரொனா தொற்றுக்கு தேவையான சிகிச்சையை எடுத்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.