யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4 ந் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் ஏப்ரல் 5ந் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவலை பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், யோகிபாபுக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் இப்படத்தில் நடித்துள்ளார்